22 தொகுதிகள் அடங்கிய காங்கிரஸ் பட்டியலை லீக் செய்தது வாரிசு எம்பியா?

Mahendran
வியாழன், 1 பிப்ரவரி 2024 (14:00 IST)
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்ற பேச்சு வார்த்தைக்கு முன்பே 22 தொகுதிகளை கொண்ட பட்டியல் ஒன்று வெளியானது. இதனால் திமுக தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.  
 
கூட்டணி பேச்சு வார்த்தைக்கு முன்னர் சத்தியமூர்த்தி பவனில் 22 தொகுதிகள் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்பட்டபோது அதை கவனித்த காங்கிரஸ் கட்சியின் வாரிசு எம்பி ஒருவர் தான் இதை தனது ஆதரவாளர் மூலம் சமூக வலைதளங்களில் லீக் செய்து விட்டதாக கூறப்படுகிறது. 
 
இதனால் அந்த எம்பி மீது காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து காங்கிரஸ் தலைமை விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
 
தனக்கு கட்சியில் எந்த விதமான முக்கியத்துவம் தரவில்லை என்பதால் தான் அதை லீக் செய்தேன் என எம்.பி தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்