மீண்டும் 16 மீனவர்கள் கைது: படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (07:45 IST)
தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் அது மட்டுமன்றி தமிழக மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு அந்த படகுகள் இலங்கை அரசால் ஏலம் விடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
 
இந்த நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 16 தமிழக மீனவர்களை மீண்டும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மேலும் 16 மீனவர்கள் சென்ற 3 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்