1550 மாணவ, மாணவிகளின் மார்க்சீட்டில் குளறுபடி ! பரிதாபநிலையை ஏற்படுத்திய கல்லூரி நிர்வாகம்

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (22:08 IST)
இந்திய அளவில் புகழ்பெற்ற ஒரு அரசுக்கலைக்கல்லூரியின் நிலையை சுட்டுக்காட்டிய ஒரே ஒரு மாணவரால் இளங்கலை 1200 முதுகலை 350 மொத்தம் 1550 மாணவ, மாணவிகளின் மார்க்சீட்டில் குளறுபடி ! பரிதாபநிலையை ஏற்படுத்திய கல்லூரி நிர்வாகம்.
 
கரூர் அடுத்துள்ள தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியானது கடந்த 1966 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது பல்வேறு துறை ரீதியில் பல்வேறு சாதனையாளர்களை உருவாக்கிய நிலையில், தற்போது, தன்னாட்சி அங்கீகாரம் பெற்றும், 2007 ம் ஆண்டு தன்னாட்சி அங்கீகாரம் பெற்றும், கல்லூரி நிர்வாகமே இன்றும் மார்க்சீட், கன்சாலெட்டெட் மார்க்சீட், புரோவோசினல் சர்ட்டிபிகேட் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்க நிலையில், அந்த அரசு கலைக்கல்லூரியில் நிர்வாக சீர்க்கேட்டினால் கல்லூரியில் உள்ள தேர்வு கட்டுப்பாட்டுத்துறை மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர் அருண் மற்றும் அவரது குடும்பத்தினர் கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் அவரது மார்க்சீட்டில் நடைபெற்று இருக்கும் குளறுபடி சம்பந்தமாக கேட்ட விஷயம் தமிழக அளவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் உள்ள மாணவ, மாணவிகளிடம் பெரும் விஸ்வரூப பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. காரணம் கிரேட் மார்க், சி.ஜி.பி மார்க் ஆகியவைகளில் மிகுந்த குளறுபடி நடந்துள்ளது.

இளங்கலை படித்த மாணவர் அதுவும் 2016 – 2019 ஆண்டு படித்த மாணவர் ஒருவரின் மார்க்சீட்டில் குளறுபடி என்று கூறி அவர் படித்து வரும் NIT மகராஷ்ட்ராவில் படித்து வரும் அந்த மாணவர் ஒருவரின் பிரச்சினை மட்டுமல்ல, அவரது கூட படித்த மற்றும் அந்த ஆண்டு படித்த அனைத்து துறை மாணவ, மாணவிகள் 1200 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில், 9 ம் தேதி திங்கள் கிழமை மார்க்சீட் குளறுபடி சம்பந்தமாக, கல்லூரி முதல்வர் கெளசல்யா தேவி அவர்களிடம் செய்தியாளர்களிடம் கேட்ட போது., அவர், சாப்ட்வேர் பிராப்ளம் என்று கூறியுள்ளார். ஆனால், பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கும் போது, இந்த கல்லூரியின் முதல்வர் இங்கு பணியாற்ற வில்லை. கரூர் மாவட்டம், குளித்தலை அரசு கலைக்கல்லூரியின் முதல்வராக இருந்துள்ளார். எனவே, கல்லூரியில் சிலரினால் ஏற்பட்ட தவறினை அதுவும் வருங்கால சந்த்தியினராம், மாணவ, மாணவிகளுக்கு அவர்களுக்கு அளித்த மார்க்சீட்டில் ஏற்பட்ட தவறினை முழு பூசணிக்காயை சோற்றில் வைத்து மறைப்பது போல இருந்துள்ளது. இதுமட்டுமில்லாமல்., இக்கல்லூரியில் இளங்கலை கணிதம் படித்த மாணவர் அருண் மற்றும் அவரது பெற்றோர்கள் எங்களுக்கு அளித்த சிறப்பு பேட்டியாவது., 2017 – 2019 ம் ஆண்டு முதுகலை படித்த 350 மாணவ, மாணவிகளுக்கும் மார்க்சீட்டிலும் குளறுபடி ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக இளங்கலை 1200 மற்றும் முதுகலை 350 என்று மொத்தம் 1550 மாணவ, மாணவிகளின் வாழ்க்கையில் விளையாடி உள்ள கரூர் அரசுகலைக்கல்லூரியின் நிர்வாகம், இதற்கு யார் பதில் கூறுவது என்று கோரிக்கை விடுத்ததோடு, எங்களுக்கு நீதி வேண்டுமென்றும், மன உளைச்சலுக்கு ஆளான அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் கரூர் மாவட்ட ஆட்சியரையும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களிடம் நேரில் சென்று மனு கொடுப்பதாக முடிவெடுத்துள்ளனர். இது சம்பந்தமாக எம்.ஏ மற்றும் எம்.எஸ்.சி படிக்கும் மாணவர்கள் NET, CSIR, GATE போன்ற தகுதித்தேர்வுகளை எழுத முடியாமல் போய் விட்டதாகவும் மாணவர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

கல்லூரியில் உள்ள வரலாற்று துறை பேராசிரியர் சிவசங்கரன் அவர்கள், மெத்தனமாக, கல்லூரியின் நிர்வாகத்திற்கு ஆதரவாக, பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனநிலையை சற்றும் கூட புரிந்து கொள்ளாமல், கோமாளியை போல், முட்டாளை போல், இது சாப்ட்வேர் பிரச்சினை என்று கூறியுள்ளார். தேர்வு முடிந்து சான்றிதழ்கள் பெற்று 1 ½ வருடங்கள் கழித்து மாணவர்கள் கண்டுபிடித்து கூறும் இந்த அவலநிலையை கல்லூரியின் நிர்வாகம் ஏன் கண்டுபிடிக்கவில்லை என்றும், கல்லூரியின் வரலாற்றுத்துறை இணை பேராசிரியர் சிவசங்கரன் அவர்களே நீங்கள் எங்களுடைய வரிப்பணத்தினை பல லட்சங்களை சம்பளங்களாக பெற்றுக் கொண்டு, நீங்கள் கூறிய பதில் நியாயமானதா ? என்றும்., உங்கள் மகன் பாதிக்கப்பட்டிருந்தால் இது போல தான் கூறுவீர்களா ? என்று வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலம் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், மத்திய அரசு வழங்கிய கல்லூரிக்கான RUSA 1.0 வின் ஒருங்கிணைப்பாளர் சிவசங்கரன் அவர்கள் பல முறைகேடுகள் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது ஆகவே  தமிழக அரசானது RUSA 1.0 திட்டத்தின் மூலம் பெறப்பட்ட அனைத்து பொருட்களின் தரத்தினையும் விலைப்பட்டியலையும் தமிழக அரசு ஒரு குழுவினை அமைத்து தீவிர விசாரணை செய்ய வேண்டுமென்றும்., சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவர்களை துறை ரீதியாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்.
 
எனவே, வரலாற்றுத்துறையின் சிவசங்கரன் அவர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனநிலையை உணரவேண்டுமென்றும், அப்படி உணராமல் அசால்ட்டாக கருத்து கூறியதற்கு பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் அவர்களது கண்டனத்தினை வன்மையாக கண்டித்ததோடு, ஒரு வாரத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை உடனடியாக வழங்க வேண்டுமென்று பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்