அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு: கவர்னர் ஒப்புதல்!

வெள்ளி, 30 அக்டோபர் 2020 (13:31 IST)
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செய்யும் மசோதா தமிழக சட்டமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த மசோதாவில் கையெழுத்திட தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் காலம் தாழ்த்தி வந்தார் 
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்ற போது சட்டமன்றம் இயற்றிய மசோதாவில் கையெழுத்திட கவர்னருக்கு இத்தனை நாள் அவகாசம் ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் கவர்னர் கையெழுத்திட்டால் தான் இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் வரும் திங்கட்கிழமைக்குள் கவர்னர் கையெழுத்திடுவார் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் கருத்து தெரிவித்தது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் கையெழுத்திட்டுள்ளார். இதனால் 300க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் பயன் அடைவார்கள் என்பது குறிப்பிடதக்கது. ஒருவேளை அவர் கையெழுத்திடவில்லை என்றால் 8 அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மெடிக்கல் சீட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்