அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எத்தனை மெடிக்கல் சீட்? மகிழ்ச்சியான செய்தி!

செவ்வாய், 3 நவம்பர் 2020 (20:01 IST)
நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்யப்படும் என்ற மசோதா சமீபத்தில் அமல்படுத்தப்பட்டதால் 395 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இந்த வருடம் மெடிக்க படிக்க சீட் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இந்த இட ஒதுக்கீட்டால் சமூகவாரி இட ஒதுக்கீட்டை பாதிக்காது என்பதும், பொது பிரிவினருக்கும் இந்த ஒதுக்கீடு பொருந்தும் குறிப்பிடத்தக்கது. இந்த இட ஒதுக்கீட்டை பெற ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் படித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் உள்ள 26 அரசு கல்லூரிகளில் உள்ள 3,650 எம்.பி.பி.எஸ் சீட்களில் 227 இடங்களும், 14 தனியார் கல்லூரிகளில் உள்ள 1,949 எம்.பி.பி.எஸ் சீட்களில் 77 இடங்களும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,760 இடங்களில் 91 இடங்களும் என மொத்தம் 395 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்