129 எம்.எல்.ஏ.க்கள் தங்களது சுய விருப்பத்தோடு தான் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளோம் என்று 5 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்ததன் மூலம் சசிகலா தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்திருப்பது உறுதியானது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 8ஆம் தேதி மாலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேருந்து மூலம் நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது நாளான இன்று 5 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் வெளியே வந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
129 எம்.எல்.ஏ.க்கள் தங்களது சுய விருப்பத்தோடு தான் தங்கியுள்ளோம். எங்களை யாரும் கட்டாயப்படுத்தி அடைத்து வைக்கவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் மற்ற எம்.எல்.ஏ.க்கள் ஏன் வெளியே வரவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
129 எம்.எல்.ஏ.க்கள், 5 எம்.எல்.ஏ.க்கள் சாட்சியாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளனர். இதன் மூலம் சசிகலா அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைத்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்று முதல்வர் ஓ.பி.எஸ் ஆலுநரிடம், எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்கள் சுயமாக செயல்பட்டால் சட்டசபையில் எனது பெரும்பான்மையை நீருப்பிப்பேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் சசிகலா தரப்பினரால் மிடட்டப்பட்டு அடைத்து வைக்கப்பட்டது உண்மைதான் என்ற தகவல்கள் பரவி வருகிறது.