முதல்வரை சந்தித்த 11 சென்னை அரசு பள்ளி மாணவ, மாணவிகள்: ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (11:55 IST)
முதல்வரை சந்தித்த 11 சென்னை அரசு பள்ளி மாணவ, மாணவிகள்
மருத்துவ படிப்பில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்காக 7.5 சதவீத இட ஒதுக்கீடு சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே
 
இந்த இட ஒதுக்கீடு காரணமாக இந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மெடிக்கல் சீட் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் பத்துக்கும் குறைவான அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மெடிக்கல் சீட் கிடைத்த நிலையில் இந்த இட ஒதுக்கீடு காரணமாக இந்த ஆண்டு மட்டும் 400 க்கும் மேற்பட்டவர்களுக்கு மெடிக்கல் சீட் கிடைத்துள்ளது 
 
இந்த நிலையில் சென்னையில் மட்டும் 11 அரசு பள்ளி மாணவர்கள் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் மெடிக்கல் கல்லூரி சீட் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் சிறப்பு கலந்தாய்வில் மருத்துவக் கல்லூரிகள் பல சேர்க்கை ஆணைகளை பெற்றதை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்
 
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 11 மாணாக்கர்கள் "அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ், சிறப்பு கலந்தாய்வில் மருத்துவக் கல்லூரியில் பயில சேர்க்கை ஆணைகள்" பெற்றதையொட்டி தங்களின் மருத்துவக் கனவை நனவாக்கியமைக்காக நன்றி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்