108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் சேர்ப்பு! – விரிவான தகவல்கள்!

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (09:01 IST)
தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவைகள் அதிகப்படுத்தப்பட உள்ள நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக 108 ஆம்புலன்ஸ் சேவை அவசியமாக உள்ளது. இதனால் கூடுதல் 108 ஆம்புலன்ஸ் சேவைகளை பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் அதிகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு புதிய ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், இலகுரக வாகனம் உரிமம் எடுத்து 3 ஆண்டுகளும், பேட்ஜ் உரிமம் எடுத்து ஒரு ஆண்டும் ஆகியிருக்க வேண்டும். வயது வரம்பு 24 முதல் 34 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் நர்சிங் பட்ட படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 19 முதல் 30 வயது வரை இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பணிகள் வழங்கப்படும். தொலைபேசி வாயிலாகவே தேர்வுகள் நடைபெறும்.

ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் - 9384010215, 7397724763, 7397724807, 7397724809, 7397724812, 7397724810, 8754435247

மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் - 7397724812, 7397724810, 7397724807, 7397724809, 8754435247 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்