ஈரோடு மாவட்டம் பவானி அருகே 23 வயது இளைஞன் ஒருவன் அப்பகுதியில் உள்ள 16 வயது சிறுமியுடன் பழகி அந்த சிறுமியை கர்ப்பமாக்கி பின்னர் அந்த கருவையும் கலைத்துள்ளான்.
பவானி அருகே பி.குமாரபாளையத்தை சேர்ந்த 23 வயதான கண்ணன் என்பர் அந்த பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இதனால் அந்த சிறுமி கடந்த 2015-ஆம் ஆண்டு கர்ப்பமடைந்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் கருவை கலைக்க சில மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளான் அந்த இளைஞன். இதனால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் சிறுமியின் பெற்றோர் அந்த இளைஞர் மீது புகார் அளிக்க இந்த வழக்கு ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன் பின்னர் இந்த வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.
அந்த தீர்ப்பில் 16 வயது சிறுமியை திருமண ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி பின்னர் அந்த கருவை கலைத்த குற்றத்திற்காக அந்த இளைஞனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. 10 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.