தமிழகத்தில் உள்ள 10 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊராட்சிக்கு அடுத்த நிலையில் உள்ள அதிக மக்கள் தொகை கொண்ட பேரூராட்சிகளை நகராட்சிகளாக அறிவிப்பது வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்வாக உள்ளது. இந்த நிலையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் ஊராட்சிகளை பேரூராட்சிகளாகவும் பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் உயர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 10 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. அதன் விவரம் இதோ
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி, உதகை- கோத்தகிரி, நெல்லை மாவட்டத்தில் உள்ள வடக்கு வள்ளியூர், சங்கர் நகர், நாராணம்மாள்புரம், தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் என 10 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படவுள்ளன.
தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.