தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த மழை ஆகியவை முடிந்துவிட்ட நிலையில் தமிழகம் முழுவதும் தற்போது வறண்ட வானிலையே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி ஜனவரி 8 ஆம் தேதி வரை தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் மற்ற மாவட்டங்களில் வறண்ட மாநில காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.