தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என ஆளுனர் கூறியது ஏன்: தமிழிசை விளக்கம்

வெள்ளி, 6 ஜனவரி 2023 (15:40 IST)
தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைக்க வேண்டும் என தமிழக கவர்னர் ஆர்.என்ரவி அவர்கள் நேற்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கமளித்துள்ளார். 
 
தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று ஏன் அழைக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி கூறியுள்ளார் என்றால் பிரிவினைவாத எண்ணம் இருக்கக்கூடாது என்றுதான் கூறியுள்ளார் 
 
இந்தியா என்ற நாட்டிற்குள் தமிழ்நாடு என்ற மாநிலம் அடக்கம் என்ற வகையில் தான் இருக்க வேண்டுமே தவிர தமிழ்நாடு என்பது தனிநாடு என்ற அர்த்தத்தில் இருக்கக் கூடாது என்றும் அதனால் தான் தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று அழைக்க வேண்டுமென்றும் ஆளுநர் அவை தெரிவித்து இர்க்கலாம் என்றும் அவர் அவ்வாறு கூறியதாக நான் கருதுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
பிரிவினைவாத என்ணம் கடந்த சில நாட்களாக அதிகமாக வருவதால் தான் தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என ஆளுநராக கூறியுள்ளார் என புதுவை ஆளுநரை சவுந்தரராஜன் கூறியுள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்