உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்திடும் வெள்ளைபூசணிச்சாறு !!

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (14:19 IST)
வெள்ளை பூசணிக்காயில் உள்ள நீர்ச்சத்துக்கள் உடல் எடையை விரைவாக குறைப்பதற்கு உதவுகிறது. இக்காயை தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம் பல்வேறு நோய்களை எளிதில் குணாமாக்க முடியும்.


வெள்ளை பூசணிக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து ஒரு டம்ளர் அளவிற்கு காலை வெறும் வயிற்றில் தினமும் அருந்தி வரும்பொழுது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

வெள்ளை பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் சி, பீட்ட கரோட்டின், கால்சியம், பொட்டாசியம் இரும்புச்சத்து, துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது.

வெள்ளை பூசணி சாற்றை தினமும் அருந்தி வரும்பொழுது குடற்பகுதியில் உள்ள உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வயிற்றுப்புழுக்கள், நாடா புழுக்கள் அனைத்தும் அழிந்து வெளியேறிடும்.

வெள்ளை பூசணிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரும் பொழுது கண் பார்வை திறன் அதிகரிக்க தொடங்கும்.

வெள்ளை பூசணிக்காய் ரத்தத்தில் உள்ள நச்சுக்களையும், கழிவுகளையும் வெளியேற்றி ரத்தத்தினை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. ரத்த சோகை பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளை பூசணிக்காய் சாறு சிறந்த நிவாரணத்தை அளிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்