ஆலிவ் எண்ணெய்யை உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்குமா...?

செவ்வாய், 28 ஜூன் 2022 (09:19 IST)
தொடர்ந்து ஆலிவ் எண்ணெய்யை உட்கொள்வது செரிமான நோய்களைத் தடுக்கிறது.இந்த எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், உங்கள் உடலும் சருமமும் மிகவும் அழகாக மாறும். இதைப் பயன்படுத்துவதன் மூலம், உடல் வலியிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.


ஆலிவ் ஆயிலை உபயோகித்தால் நம்முடைய எலும்புகளுக்கு சக்தியை தரும். கால்சியத்தின் அளவை அதிகரிக்கும். ஆலிவ் ஆயிலில் உள்ள ‘ஒலெயூரோபின்’ சத்துக்கு நம்முடைய எலும்பை வலுவாக்கும் சக்தி உள்ளது.

ஆலிவ் எண்ணெயில் ஒலிக் அமிலம் போன்ற மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை இதயத்திற்கு நல்லது மற்றும்  இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.  ஆலிவ் எண்ணெய் வயிறு நிரம்பிய திருப்தி உணர்வைத் தருகிறது. இதன் மூலம் அதிக அளவு கலோரிகள் உணவின் மூலம் உட்கொள்ளப்படுவது குறைகிறது.

உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை உட்கொள்ளும் பொது ஆலிவ் எடுத்துக் கொண்டால் இரத்த அழுத்தம் மிகவும் குறைய வாய்ப்பு உள்ளது. இரத்த சர்க்கரையை குறைக்கும் மருந்துகளுடன் ஆலிவ் எண்ணெய்யை உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க வாய்ப்பு உள்ளது.

ஆலிவ் எண்ணெய் செரிமான ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. இது வழக்கமான குடல் இயக்கத்தை பராமரிக்கிறது, மலச்சிக்கலை தடுக்கிறது.

ஆலிவ் எண்ணெய்யில் வைட்டமின் ஈ உள்ளது. இது புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது, ஆலிவ்  எண்ணெய்யைக் கொண்டு உடலையும் மசாஜ் செய்யலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்