தினமும் சிறிதளவு வேசலின் எடுத்து உங்கள் உதடுகளில் தடவி வந்தால், மென்மையாகவும், வெடிப்புகள் இல்லாமலும் இருக்கும்.
குளியல் உப்பை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, பாதங்களை அதில் ஒரு 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும். பிறகு கால் நகங்களில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றலாம். பின்னர், கால்களை தண்ணீர் அல்லது சோப்பால் நன்கு கழுவிவிட்டு, கோல்ட் க்ரீம் அல்லது மாய்சரைசர் போடலாம். இதனால் பாதங்கள் மிருதுவாகவும் பளிச்சென்றும் இருக்கும்.
எண்ணெய் பசையுள்ள சருமத்தை வால்நட் ஸ்க்ரப் கொண்டும், உலர்ந்த மற்றும் சென்ஸிடிவ் சருமத்தை மிருதுவான பேபி ஆயில் கொண்டும் துடைக்கலாம். அவ்வாறு துடைக்கும்போது உங்கள் கைகளின் அசைவு வட்ட வாக்கில் இருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட்டு தரமான நைட் க்ரீம்களை உபயோகப்படுத்த வேண்டும்.
எளிதான மாய்சரைசரும் உபயோகப்படுத்தலாம். இது, உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. இந்த மாய்சரைசரை முகம், கைகள், கழுத்து மற்றும் கண்களுக்கு கீழேயும் உபயோகிக்கலாம்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்தப் பாத்திரத்தின் உள்ளே ஒரு சிறிய அளவிலான பாத்திரத்தில் எண்ணெய்யை (ஆலிவ் ஆயில், ஆல்மண்ட் ஆயில் அல்லது சாதாரண தேங்காய் எண்ணெய்) எடுத்துக் கொண்டு சூடு படுத்த வேண்டும். லேசான சூடு போதுமானது. அவ்வாறு சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.