ஜவ்வரிசியில் நல்ல அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்க விரும்புவோருக்கு நல்லது.
ஜவ்வரிசி மாவுச்சத்து நிறைந்த உணவாக இருப்பதால், இதன் மூலம் எளிதில் உடல் எடையை அதிகரிக்கலாம்.
ஜவ்வரிசியில் கணிசமான அளவு பொட்டாசியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இது இரத்த நாளங்கள் வழியாக ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது, இதையொட்டி, இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது மற்றும் இதயத்தில் உள்ள சிரமத்தை குறைகிறது.
ஜவ்வரிசிசி தசை வளர்ச்சிக்குத் தேவையான புரதத்தின் சிறந்த மூலமாகும். இது சேதமடைந்த செல்கள் மற்றும் திசுக்களை சரிசெய்ய உதவுகிறது மற்றும் செல்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இது தசை வளர்ச்சிக்கு மட்டுமல்லது உடல் வலிமை பெறவும் உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது.
ஜவ்வரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது . இது செரிமான ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது மற்றும் வீக்கம், மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சினைகளை தவிர்க்க உதவுகிறது.
ஜவ்வரிசியில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்த உதவுகிறது. மூட்டுவலி அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. வளரும் குழந்தைகளின் உணவில் ஜவ்வரிசியை அதிகம் சேர்ப்பதால் எலும்புகளை பலப்படுத்துகிறது.
ஜவ்வரிசியில் மாவுச்சத்து மற்றும் எளிய சர்க்கரைகளால் நிறைந்துள்ளது, அவை உடலில் எளிதில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதிக அளவு குளுகோஸை உருவாக்குகிறது.
விரதத்திற்கு பிறகும், உடற்பயிற்சிக்கு பிறகும் சாப்பிடுவதற்கு ஜவ்வரிசி சிறந்த உணவாகும். ஏனெனில் இது உடலை அதிக ஆற்றலுடன் வைத்திருக்கிறது மற்றும் உடல் சோர்வு, தலைச்சுற்றல், தலைவலி ஆகியவற்றைத் தடுக்கிறது.