உயரமாக வளர அவசியமான உணவுகள் எது?

Webdunia
வியாழன், 6 ஜூலை 2023 (09:03 IST)
குழந்தைகள் நல்ல உயரமாக வளர ஆரம்பம் முதலே ஆரோக்கியமான உணவுகளை அளிப்பது அவசியம். குழந்தைகள் உயரமாக வளர அவசியமான உணவுகள் குறித்து தெரிந்து கொள்வோம்.


  • பாலில் செறிவாக உள்ள கால்சியம் மற்றும் ப்ரோட்டீன் எலும்புகளை வலுப்படுத்தி வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • பச்சை காய்கறிகளில் உள்ள ஃபோலேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் விட்டமின்கள் குழந்தைகள் வளர்ச்சிக்கு அவசியம்.
  • வேகவைத்த முட்டையில் உள்ள செறிவான புரதச்சத்து குழந்தைகளுக்கு வளர்ச்சி, எதிர்ப்பு சக்தி இரண்டையும் தருகிறது.
  • குழந்தைகள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான குளுக்கோஸ் விகிதம் கிடைக்கும்.
  • முட்டைக்கோஸ், பிராக்கோலியில் உள்ள கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் குழந்தைகள் வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • பீன்ஸ், பருப்பு வகைகளில் உள்ள நார்ச்சத்து, புரதச்சத்து, விட்டமின் பி ஆகிய சத்துக்கள் குழந்தைகள் உயரமாக வளர உதவும்.
  • குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக விவரங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்