கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் 40 வயதுக்கு மேற்பட்டவருக்கு மட்டுமே சர்க்கரை நோய் வரும் என்ற நிலையில் தற்போது சிறு வயதிலேயே சர்க்கரை நோய் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை இந்த நோயால் தற்போது பாதிக்கப்பட்டு வருவதாகவும் டைப் 2 என்ற சர்க்கரை நோய் என்பது பெரும்பாலும் இளம் வயதினருக்கு வருகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் சுறுசுறுப்பு குறைந்த வாழ்க்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது தான் என்று கூறப்படுகிறது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதை தடுப்பதற்கு நல்ல ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும் என்றும் சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும் என்றும் தவறாமல் தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் இளம் வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிப்படைந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.