தினமும் கேரட் ஜுஸ் அருந்துவதால் பயன்கள் என்ன தெரிந்துக்கொள்வோம்...!!

Webdunia
தினமும் கேரட் ஜுஸ் அருந்தி வந்தால் பார்வைத் திறன், உயர் ரத்த அழுத்தம் பிரச்னை மட்டுமின்றி, உடலின் பல்வேறு பிரச்சனைகள் சரியாகும்.

ஜூஸ் ஆக அருந்துவதைக் காட்டிலும் கேரட்டை தினமும் பச்சையாக சாப்பிடலாம். தினமும் கேரட் ஜூஸ் அருந்தி வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து சிறுகுடலில் வாழும் நல்ல பாக்டீரியா காலனியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதன் காரணமாக வாயுத் தொல்லை உள்ளிட்ட பிரச்னைகள் தவிர்க்கப்படும். ஊட்டச்சத்துக்கள் எளிதாக கிரகிக்கப்படும்.
 
கேரட்டில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது இதயத்துக்கு, மூளைக்கு, கல்லீரலுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள வைட்டமின் சி எளிதில் கிரகிக்கப்படும். நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்படும்.
 
கல்லீரலில் தேங்கும் நச்சுக்களை அகற்றும் ஆற்றல் கேரட் ஜூசுக்கு உண்டு. மஞ்சள் காமாலை, மலேரியா, டெங்கு பாதித்த நோயாளிகள் கேரட் ஜூஸ் அருந்துவதன் மூலம் கல்லீரலை பலப்படுத்தலாம்.
 
கேரட்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட் இதயத் தசைகள் மற்றும் ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் அதிக அளவில் உள்ள பீட்டா கரோட்டின் பார்வைத் திறன் மேம்பட உதவுகிறது.
 
கேரட் ஜூஸ் இன்னும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்று கருதினால் சிறிது இஞ்சி, பூசணி விதை, வெள்ளரி, பீட்ரூட் சாறு சிறிது சேர்த்துக்கொள்ளலாம். அனைத்தும் சேர்ந்த கலவை வித்தியாசமான ருசியில் இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்