அதிக புரோட்டின் நிறைந்த சோயா, ஓட்ஸ் ஆகியவை கொலாஜனை தூண்டும். ஆகவே அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலனை தரும். நார்சத்து நிறைந்த காய்கள் பழங்கள் கட்டாயம் உங்கள் டயட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
இது தவிர்த்து நிறைய நீர் குடிப்பது மிகவும் அவசியம். அதோடு, சருமத்திற்கு ஊட்டம் தரும் அழகுகுறிப்புகளை அவ்வப்போது பயன்படுத்தினால், சருமம் இறுகி இளமையாக காட்சியளிக்கும்.
தேவையான பொருட்கள் : சிவப்பு திராட்சை - சில, ஸ்ட்ரா பெர்ரி - சில, தயிர் - 2 டீஸ்பூன், தேன் - 1 ஸ்பூன். சிவப்பு திராட்சையிலும், ஸ்ட்ரா பெர்ரியிலும் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. அதிலும் ஸ்ட்ரா பெர்ரியில் சாலிசிலிக் அமிலம் உள்ளது. இவை சுருக்களை நீக்குகிறது. சரும செல்களை உயிர்ப்பிக்கிறது.