அன்றாடம் பப்பாளியை எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் ஏராள நன்மைகள் !!

Webdunia
பப்பாளியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ், புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்துப் போராட உதவும். மேலும் இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுக்கும். 

பப்பாளியில் உள்ள நார்சத்து மனித உடலில் செரிமானத்தை சீரக்கி, மலச்சிக்கல் வராமல் இருக்க உதவும் பப்பாளி விதையை பொடியாக்கி பாலில் கலந்து குடித்து  வர அதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் இதய நோய், சர்க்கரை நோய், பக்கவாதம் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது.
 
பப்பாளியில் உள்ள பொட்டாசியம் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும். உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள், பப்பாளியை  வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம் மேலும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். 
 
குறைந்த கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள பப்பாளியை வெறும் வயிற்றில் உட்கொண்டால் உடல் எடை வெகுவாக குறையும் நோய்  எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள பப்பாளியில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்க உதவும்  பப்பாளி ஆண்களுக்கு மிகச்சிறந்த பழம்.
 
பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
 
பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
 
மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வாய்வு, நெஞ்சு எரிச்சல், அல்சர், சர்க்கரைவியாதி மற்றும் கண்பார்வை கோளாறுகளுக்கு பப்பாளி ஒரு சிறந்த மருந்தாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்