எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த முருங்கை கீரை !!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (17:49 IST)
முருங்கை கீரை கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் சிறந்த மூலமாகும். இந்த இரண்டு சத்துக்களும் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமாகும்.


முருங்கை கீரை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், அவை மூட்டுவலியை எதிர்த்துப் போராட உதவுவதோடு, சேதமடைந்த எலும்புகளையும் குணப்படுத்த உதவுகிறது.

முருங்கைக் கீரை நுண் கிருமிகள், பாக்டீரியா போன்ற தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது. அவை இரத்த உறையும் நேரத்தை குறைப்பதன் மூலம் காயங்கள், சிறிய வெட்டுக்கள் மற்றும் தீக்காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுகின்றன.

முருங்கைக் கீரையில் உள்ள அதிக அளவு வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி  நரம்பு சிதைவை எதிர்த்து மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் அல்லது தொடர் தலைவலியால் அவதிப்படுபவர்கள் முருங்கை இலைகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும் உதவும்.

முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்து சாப்பிட்டு வந்தால் போதும் எந்த நோயும் அண்டாது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்