சப்போட்டா பழத்தின் சில சிறந்த ஆரோக்கிய நன்மைகள் !!

புதன், 30 மார்ச் 2022 (15:14 IST)
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் சப்போட்டா பழம் பயன்படுகிறது. இதில் உள்ள பொட்டாசியம்  சோடியம் அளவைக் குறைக்க உதவுகிறது.


இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது. சப்போட்டா பழத்தில் பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் நிறைந்துள்ளதால் உடனடி ஆற்றலை வழங்குகிறது.

வளரும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பூர்த்தி செய்ய இது சரியான தேர்வாகும். சப்போட்டா பழம் நன்மைகள் அதிலுள்ள வைட்டமின்கள் சி, ஏ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் அடங்கியுள்ளன.

உடல் செல்களை சேதப் படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்கி தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மேலும் நாள்பட்ட நோய்களின் தீவிரத்தைக் குறைக்கின்றன.

சரும ஆரோக்கியம் மற்றும் அழகை அதிகரிக்க சப்போட்டா ஒரு சிறந்த பழம். சப்போட்டாவில் உள்ள ஏ, சி, ஈ மற்றும் கே வைட்டமின்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து சரும செல்களை புத்துயிர் பெற செய்கின்றன.

சப்போட்டா பழத்தில் நிறைந்துள்ள நார்ச்சத்து குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மற்றும் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்