தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெய்யை 15 முதல் 20 நிமிடங்கள் வாயில் வைத்து நன்றாக அலசி வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் கிருமிகள் மற்றும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.
சமையலுக்கு பயன்படுத்தப் படும் மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, இந்த எண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.