வாரத்திற்கு ஒருமுறை செம்பருத்தி பூ இலைகளை அரைத்து பின்பு தலையில் தேய்த்து குளிப்பதனால் உடல் சூடு குறையும் தலைமுடிக்கு நல்ல மனத்தையும் கொடுக்கிறது.
செம்பருத்தி இதழ்களை பத்து அல்லது பதினைந்து இதழ்களை எடுத்துக்கொண்டு அதனுடன் பால் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். அதில் சிறிதளவு அரிசிமாவு சேர்த்து பேஸ்பேக் போடுவதனால் முகம் பளபளக்கும், கரும்புள்ளிகள் மறைந்து முகம் அழகான தோற்றத்தை தரும்.
செம்பருத்தி பூ டீ செய்முறை: இரண்டு அல்லது மூன்று செம்பருத்தி இதழ்கள், அதனுடன் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள், சிறிதளவு சுக்கு, இரண்டு துளசி இலைகள் இதையெல்லாம் சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும். பின்பு வடிகட்டி அதனுடன் தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து அருந்துவது உடலுக்கு நல்ல வலுவை கொடுக்கிறது, முக்கியமாக இருதயத்துக்கு நன்மை பயக்கிறது.
காயவைத்த செம்பருத்தி இதழ்களுடன், ஆவாரம்பூ பாசிப்பயிறு, கருவேப்பிலை இவைகளைச் சேர்த்து பொடியாக்கி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். தினம்தோறும் குளிப்பதற்கு, சோப்பிற்க்கு பதிலாக இந்த தூளை உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் தோல் நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம்.
இளநரை பொடுகு பிரச்சனை தீர சிலருக்கு இளநரை, பொடுகு தொல்லை, முடி உதிரும் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். செம்பருத்திப்பூ இலைகளுடன் கறிவேப்பிலை, மருதாணி இலை இவற்றை சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊறவைத்து பின்பு குளிக்கவேண்டும். இதேபோன்று வாரத்திற்கு இரண்டு முறை செய்துவந்தால் தலைமுடி பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். இப்படி செய்து வரும்போது நம் கண்களும், உடலும் குளிர்ச்சி அடையும். உடம்பில் உள்ள சூடு தன்மை குறையும்.