ஒரு ஸ்பூன் தயிருடன் பாதி தக்காளிப் பழத்தை நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி, இருபது நிமிடம் ஊறியவுடன் கழுவினால், முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மறையும்.
ஒரு தேக்கரண்டி தேனும் அரை தேக்கரண்டி எலுமிச்சம்பழச்சாறும் கலந்து தினமும் இரு வேளை குடித்து வந்தால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதோடு, முகமும் பளிச்சென்று இருக்கும்.
டீவீலரில் போகும் பெண்கள் ஃப்ரி ஹேர் விடவே கூடாது. சிக்கலாகி முடி கொட்டும். தலையில் ஸ்கார்ஃப் அல்லது தொப்பி கட்டாயம் அணியுங்கள். தலைமுடியைப் பின்னி அடிமுடியில் வெயில் விழாதவாறு ரிப்பன் போடுவது நல்லது.
நாள்பட்ட தேங்காயைத் தூர எறிந்துவிடாதீர்கள். அதைத் சிறிது நீர் விட்டு அரைத்து எடுத்து, அந்த விழுதை தலையில் தடவிக் கொண்டு சிறிது நேரம் ஊறியபின், சீயக்காப் பொடி தேய்த்து தலைமுடியை அலசுங்கள். தலைமுடி பளபளக்கும்.
இளநரையைத் தடுக்க வாரத்தில் ஒரு நாள் மருதாணி இலை அரைத்த விழுது 1 கப், ஒரு முழு எலுமிச்சம் பழச்சாறு, தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன், நெல்லிமுல்லி பொடி 2 ஸ்பூன் இந்த கலவையை இரவில் தயாரித்து 1/4 கப் தயிரில் கலந்து வைத்துவிடவும். காலையில் எழுந்தவுடன் தலையில் இதை தேய்த்துக் கொண்டு ஒன்றரை மணி நேரம் ஊறவிட்ட பின் சீயக்காய் தேய்த்துக் குளியுங்கள்.
ஜலதோஷத்தால் மூக்கடைப்பு ஏற்பட்டால், ஓமத்தை ஒரு மெல்லிய வெள்ளைத் துணியில் முடிந்து உறிஞ்சினால் மூக்கடைப்பு நீங்கும். சீரகம் போட்டுக் காய்ச்சிய தண்ணீரைக் குடித்து வந்தால் வயிற்றிலுள்ள சிறுபூச்சிகள் அழியும். இரைப்பைக் கோளாறும் அண்டாது.
திராட்சை சாறு வளரும் குழந்தைகளின் பல், எலும்பு வளர்ச்சிக்கு உகந்தது. கர்ப்பிணிகள் திராட்சை சாறை அடிக்கடி அருந்துவதன் மூலம், வயிற்றில் உள்ள சிசு ஆரோக்கியமாக வளரும். அதன் இதயம், எலும்பு, மூளை போன்றவை பலப்படும்.