பெண்களின் சருமத்தை அழகூட்டும் இயற்கை பொருட்கள்

Webdunia
வியாழன், 9 மார்ச் 2017 (05:04 IST)
தற்கால நாகரீக உலகில் பெண்களின் அன்றாட பணிகளில் ஒன்றாக மேக்கப் மாறிவிட்டது. சருமத்தை மிருதுவாக வைப்பது தொடங்கி பல்வேறு விதமான அழகுக்கு பெண்கள் பியூட்டி பார்லர்களை நோக்கி செல்கின்றனர்.


 


ஆனால் வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களில் இயற்கை மூலிகைகள் மூலம் சருமத்தை அழகூட்டுவதுதான் சிறந்தது என்று நம் முன்னோர்கள் கூறி வருகின்றனர். பியூட்டி பார்லர்களில் கெமிக்கல் கலந்த பொருட்கள் பயன்படுத்துவதால் நாளடைவில் சருமம் உள்பட உடல்நிலை பாதிக்கும் என்பதை அனைத்து பெண்களும் புரிந்து கொள்ள வேண்டும்

நம் முன்னோர்கள் முக அழகிற்கும் சரும பாதுகாப்பிற்கும் வேப்பிலை, குங்குமப்பூ, மஞ்சள், சந்தனம், துளசி, தயிர், முல்தானி மட்டி, கடலை பருப்பு, தேன், நெல்லிக்காய் போன்ற பொருட்களை பயன்படுத்தி வந்தனர். இந்த பொருட்கள் முற்றிலும் சருமத்தை பாதுகாப்பதுடன், சருமத்தை போஷிக்கவும் செய்யும். இவ்வாறு  வீட்டில் உள்ள மூலிகைகள் கொண்டு அழகை மேம்படுத்துவது எப்படி என்பதை தற்போது பார்ப்போம்

1. வறண்ட சருமங்களை கொண்ட பெண்கள் தங்கள் சருமத்தை பொலிவாகவும் மிருதுவாகவும் மாற்ற  வேப்பிலை பவுடரை கொஞ்சம் எடுத்து அதனுடன் திராட்சை சாறு கலந்து முகம் முழுவதும் பூச வேண்டும் பின்னர். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் பளபளப்புடன் மாறும்

2. முகப்பரு உள்ளவர்கள் வேப்பிலையை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து பின்னர் அந்த நீரை நனைத்து பரு மீது தடவி வந்தால் ஒருசில நாட்களில் பருக்கள் மறைந்து போய்விடும்.

3.  பன்னீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் குங்குமப்பூவை போட்டு சுமர் ஒரு மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்த தண்ணீரை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள கருமை மறைந்து உண்மையான சிகப்பழகு வந்துவிடும். இதற்காக பெண்கள் க்ரீம்களை பயன்படுத்த வேண்டம்.

4. மேலும் ஒருசில பெண்களுக்கு முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றி முக அழகை கெடுக்கும். இவர்கள்  குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து பூசி வந்தால் போதும், கரும்புள்ளி காணாமல் போய் விடும். மேலும் குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து அதனுடன் கொஞ்சம் சந்தன தூளை கலந்து குழைத்து முகத்தில் பூசினால் முகம் பளபளப்புடன் திகழும்.

5.  சந்தன விழுதை நன்றாக அரைத்து தூள் செய்து அதனுடன் பாதாம் பவுடரை கலந்து அதனுடன் சிறிது பால் சேர்த்து அந்த கலவையைமுகம் மற்றும் கைப்பகுதிகளில் பூசினால் சருமம் கண்ணாடி போன்று பளிச்சென மின்னும்
அடுத்த கட்டுரையில்