வறண்ட சருமத்தின் ஈரப்பதத்தை மேம்படுத்தும் தேங்காய் எண்ணெய் !!

திங்கள், 18 ஏப்ரல் 2022 (17:53 IST)
தேங்காய் எண்ணெய்யில் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் வருவது குறைவு என்று ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.


உடல் பருமனாக இருந்தால் தேங்காய் எண்ணெய்யில் உள்ள உணவு கொழுப்புகள் எடையை குறைக்கலாம்.

தேங்காய் எண்ணெய்யில் ட்ரைகிளிசரைடுகள் எனப்படும் நல்ல கொழுப்புகள் உள்ளன. இது மற்ற வகை உணவுக் கொழுப்புகளை விட உடலில் கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது.

தேங்காய் எண்ணெய் முடி கொட்டுவதில் இருந்தும் முடி சேதமடைவதிலிருந்தும் பாதுகாக்கும். தேங்காய் எண்ணெய் ஒரு சன்ஸ்கிரீனாக செயல்பட்டு சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்களில் சுமார் 20 சதவிகிதத்தை தடுத்து நம்மை காக்கிறது.

தேங்காய் எண்ணெய் வறண்ட சருமத்தின் ஈரப்பதத்தை மேம்படுத்தி, தோல் அழற்சியின் அறிகுறிகளைக் குறைக்கும். தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு உள்ளடக்கம் இருக்கின்ற போதிலும், கொலஸ்ட்ரால் அளவை சம நிலையில் வைத்திருக்க உதவுகிறது.

தேங்காய் எண்ணெய்யில் இயற்கையான நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. இது உடலில்  எச்.டி.எல் எனும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. அதே நேரத்தில்,  எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பிலிருந்து விடுபட உதவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்