எளிதில் கிடைக்கும் கற்றாழையின் மூலம் பல நோய்கள் குணமடைகிறதா...!!

செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (09:49 IST)
கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதை தவிர இயற்கை ஜெல்லை பயன்படுத்தினால் நல்ல பலன் இருக்கும்.


முகத்தில் ஏற்படும் பருக்களை போக்க கற்றாழை பயன்படுத்தலாம். இதன் ஜெல்லை முகத்தில் தடவி வந்தால் அதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள் முகப்பருவை போக்கும்.

தினமும் காலையில் சிறிதளவு தோல் நீக்கிய கற்றாழையை ஜூஸ் போட்டோ அல்லது அப்படியே மென்று சாப்பிட்டு வந்தாலோ மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல்கள் போன்ற ஜீரண உறுப்புகளில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

கற்றாழை சாறு அல்லது கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணையை கோடைகாலங்களில் நமது மேற்புற தோலில் பூசிக்கொள்வதால் சரும நோய்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க முடியும்.

தோல் நீக்கிய கற்றாழை தண்டுகளை சிறிதளவு மென்று சாப்பிட்டு வந்தால் ஈறுகள் பலம் பெறும். பற்களில் சொத்தை ஏற்படுத்தும் கிருமிகளை அழிப்பதிலும் கற்றாழை உதவுகிறது.

கற்றாழை ரத்தச் சோகை உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும் ஆயுர்வேத தயாரிப்புகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்