கோடையில் நாம் தவிர்க்கவேண்டிய சில உணவுகள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

Webdunia
வியாழன், 5 மே 2022 (13:44 IST)
கோடை காலம் வந்து விட்டாலே உணவு பழக்கத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும். 


நமது உடலில் சாதாரண நேரத்தில் இருக்கும் வெப்பத்தை விட கோடை காலத்தில் உடலின் வெப்பமானது அதிகமாகவே இருக்கும். இந்த வெப்பமானது உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

வெயில்காலத்தில் புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை, மசாலா பொருட்கள் இது போன்ற உணவிற்கு காரத்தைத் தரும் பொருட்களை தவிர்ப்பது நல்லது.

எண்ணெய்ப் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். காபி, தேநீர் அடிக்கடி குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்

சர்க்கரை மற்றும் கிரீம் அதிகமுள்ள இனிப்பு பண்டங்கள், பலகாரங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. குளிர்ச்சியான குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் தண்ணீரில் உள்ள குளிர்ச்சி, இரத்தக் குழாய்களை சுருக்கி, உடலின் வெப்பத்தை மேலும் அதிகமாக்கிவிடுகிறது.

வெயில் காலத்தில் கத்திரிக்காய், கிழங்கு வகை மற்றும் மாவு வகை உணவுகளை அடிக்கடி உண்பதை தவிர்க்க வேண்டும். பயிறு, எள்ளு, ராகி, அதிக மைதா உணவுகள், வேர்க்கடலை,கோதுமை போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும்.

கோடை காலத்தில் நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. மேலும்  பால் பொருட்களான சீஸ், பால், தயிர் போன்றவை உடல் வெப்பத்தை அதிரிக்கும் தன்மை கொண்டவை .

மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. மேலும் சாலையோர கடைகளில் விற்கப்படும் ‘பாஸ்ட் புட்’ உணவு வகைகளையும் சாப்பிடுவதை அறவே தவிர்த்திட வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்