கண்களின் அருகில் உள்ள சுருக்கங்களை போக்க உதவும் உருளைக்கிழங்கு சாறு !!

Webdunia
வியாழன், 5 மே 2022 (13:13 IST)
இரண்டு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் தலா இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய், பால் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.


இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி, கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் சருமம் பொலிவு பெறும்.

முகம் பொலிவு பெறுவதற்கு உருளைக்கிழங்கை வைத்து அற்புதமான இயற்கை முறையில் ஃபேஸ் பேக் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள்: ஒரு டீஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு, 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, சிறிதளவு முல்தானி மெட்டி. இந்த மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து ஒரு பேஸ்ட் ஆக தயார் செய்து இதை முகத்தில் எல்லா இடத்திலும் படும்படி தடவுங்கள்.

இந்த பேஸ்ட் காயும் வரை அப்படியே வைத்திருங்கள். நன்றாக இந்த பேஸ்ட் காய்ந்த பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். தொடர்ந்து நீங்கள் இதை செய்து வரும் பொழுது உங்களுடைய முகம் அழகாக பிரகாசமாக மாறத் தொடங்கும்.

கண்களின் அருகில் இருக்கக்கூடிய சுருக்கங்களை அகற்ற உருளைக்கிழங்கை சிறு துண்டாக வெட்டி கண்களின் மீது படும்படி வைத்து, ஒரு பத்து நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு அதன் பிறகு தண்ணீரில் முகத்தை கழுவலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்