மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் குப்பைமேனி மூலிகை !!

Webdunia
குப்பைமேனி இலைகள் பல விதமான மருத்துவ குணங்கள் கொண்டதாகும். இந்த இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலில் இயற்கையை இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது.

குப்பைமேனி இலைச்சாறு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அருந்துவதால் ரத்தத்தில் அதிகரித்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.
 
செரிமானமின்மை, வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமசீரற்ற நிலை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்டவர்கள் குப்பைமேனி இலைகள் சிலவற்றை பச்சையாகவோ அல்லது அந்த இலைச்சாறு துளிகள் சிறிது அருந்திவந்தாலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
 
தோல் நோய்கள், சொறி, சிரங்கு மற்றும் அலர்ஜி போன்றவைகளுக்கு குப்பை மேனி இலை, மஞ்சள் மற்றும் உப்பு. இவற்றை சேர்த்து அரைத்து, தோலின் மீது பூசி மூன்று மணி நேரம் வைத்து, அதன் பிறகு கழுவிவர நாள்பட்ட தோல் நோய், சொறி, சிரங்கு மற்றும் அலர்ஜி போன்றவை குணமாகும்.
 
குப்பைமேனி இலையில் சாறு எடுத்து, தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி வடிகட்டி, மூட்டு வலி உள்ள இடத்தில் தடவிவர மூட்டு வலிகள் நீங்கும்.
 
பெண்கள் குப்பைமேனி இலையை உடன் சேர்த்து, அரைத்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து, முகம் கழுவி வர, முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், மனையும், முகம் பளபளப்பாகும்.
 
பத்து குப்பைமேனி இலையை, நன்கு சுத்தம் செய்து, பசும்பாலுடன் காய்ச்சி கொடுக்க உடல் ஆரோக்கியமும் மேம்படும். ஒரு கைப்பிடி அளவு எடுத்து, கஷாயமாக்கி கொடுக்க சளி மற்றும் இருமல் குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்