தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லதா..? கெடுதலா..?

Webdunia
மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. நிறையப் பேருக்குப் பிடித்த உணவும்கூட. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன. ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது. மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். 
ஆன்டிஆக்ஸிடன்ட்: இதிலிருக்கும் லூடின் மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும். முட்டை, உடல் எடையைக்  குறைப்பதற்கும் உதவி செய்யும். நம் அன்றாட உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் பெண்கள் தினமும் ஒரு முட்டை அல்லது வாரத்திற்கு  7-க்கும் அதிகமான அளவு முட்டைகளைச் சாப்பிட்டால், சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் 77 விழுக்காடு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
 
ஆய்வில் மஞ்சள் கருவிலிருக்கும் அதிகபட்சக் கொழுப்பால் இதய நோய்கள் வரக்கூடும் என்ற காரணமும் சொல்லப்பட்டது. ஆனால், பிறகு வந்த  ஆராய்ச்சிகளோ ‘அப்படி எந்த ஆபத்தும் இதனால் ஏற்படாது’என்றன. வாரம் ஆறு முட்டைகளைச் சாப்பிடுபவர்களின் ரத்த அளவு ஒரே நிலையில்தான்  இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டது.
 
சர்க்கரைநோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இதனால் இதய நோய்  ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. முட்டையுடன் கோதுமை பிரெட் மற்றும் காய்கறிகளுடன் சாப்பிடலாம். இறைச்சி, சீஸ், வெள்ளை பிரெட் ஆகியவற்றை  இதனுடன் சாப்பிடும்போது சுவையாகத்தான் இருக்கும். ஆனால், முட்டையுடன் சாச்சுரேடட் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது சிறந்ததல்ல.
 
நீரிழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். டாக்டர் யோசனைபடி வாரம் ஒரு முட்டை சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்