இலை முதல் வேர் வரை அனைத்தும் மருத்துவ குணம் கொண்ட நித்தியகல்யாணி!!

Webdunia
நித்தியகல்யாணி முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. பூ, வேர் ஆகியவை அதிகமாக மருத்துவத்தில் பயன்படுபவை. நித்திய கல்யாணியின் இலை முதல் வேர் வரை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டதாகும். 
நித்திய கல்யாணி வெள்ளை அணுக்களின் அதிகரிப்பால் ஏற்படும். இரத்தப் புற்றுநோயை எதிர்க்கும் மருத்துவப் பயன் கொண்டது.
 
சிறுநீர் தாரை நோய்கள் சரியாக நித்தியகல்யாணி பூக்களை கஷாயம் தினமும் நான்கு வேளைகள் 25 மிலி அளவு சாப்பிடவேண்டும் அல்லது  வேரை காயவைத்து தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அலவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வரவேண்டும்.
 
உடல் அசதி குணமாக 5 நித்தியகல்யாணி பூக்களை அரை லிட்டர் நீரில் இட்டு பாதியாகக் சுண்டக் காய்ச்சி குடிக்கவேண்டும்.
 
நீரிழிவு கட்டுபட நித்திய கல்யாணி வேர்த்தூள் 1 சிட்டிகை அளவு சுடுநீரில் கலந்து உள்ளுக்குச் சாப்பிடவேண்டும். ஒரு நாளைக்கு 3 முறை  என ஒரு வாரம் வரை தொடர்ந்து சாப்பிடலாம்.
 
சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகிறது, இதன் மருத்துவ குணம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. நித்ய கல்யாணி வேர்  சூரணத்தை ஒரு தேக்கரண்டி எடுத்து வெந்நீரில் கலந்து நாளைக்கு மூன்று முறை அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
 
நித்ய கல்யாணியில் இருந்து எடுக்கப்படும் மூலப் பொருட்கள் கொண்டு புற்று நோய்க்கு மருந்து தயாரிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்