வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை போக்கிடுமா அம்மான் பச்சரிசி...?

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (17:15 IST)
அம்மான் பச்சரிசியின் இலை, தண்டு, பால், பூ போன்ற அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. இதற்கு சித்திரவல்லாதி, சித்திரப்பாலாவி, சித்திரப்பாலாடை ஆகிய வேறு பெயர்களும் உண்டு.


சித்த மருத்துவத்தில் பயன்படும் ஒரு வகை மூலிகையாகும். இதன் விதைகள் அரிசி குருணை போன்று சிறிதாக இருப்பதால் பச்சரிசி எனவும், தாய்பாலை அதிகரிக்க பயன்டுவதால் இது அம்மான் பச்சரிசி என அழைக்கபடுகிறது. இது ரோட்டு ஓரங்களிலும், புதர்களிலும் தானே வளரும் தன்மையுடையது.

அம்மான் பச்சரிசியை ஒரு கோலி குண்டு அளவு எடுத்து நன்றாக அரைத்து பாலில் கலந்து தினம் ஒரு வேளை மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் நீர்கடுப்பு, நமைச்சல் ஆகியவை குணமாகும்.

அம்மான் பச்சரிசி இலையை அரைத்து சுமார் சிறிதளவு பால் அல்லது மோரில் கலக்கிப் பெரியவர்களுக்குக் கொடுத்தால் வெயிலினால் ஏற்படும் வெட்டை, மருந்துகள் சாப்பிடுவதால் ஏற்படும் உஷ்ணம் ஆகியவை போகும்.

அம்மான் பச்சரிசியின் இலைகளை நிழலில் உலர்த்தி இடித்து சூரணம் செய்து 5 கிராம் அளவு மோரில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மலசிக்கலை போக்கும். மேலும் குழந்தைகளின் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளையும் தீர்த்து, வயிற்று பூச்சிகளையும் கொல்லும்.

Edited by Sasikala

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்