கொத்தவரங்காய் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா...?

Webdunia
கொத்தவரங்காய் அதிகளவு புரதச்சத்துகள், கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள் மற்றும் கரையக் கூடிய நார்ச்சத்துகளை கொண்டிருப்பதால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

கொத்தவரங்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அது நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
 
கர்ப்பிணி பெண்கள் கொத்தவரங்காய் அதிகம் உணவில் சேர்த்து உண்பதால் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது. 
 
கொத்தவரங்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் வேதி பொருட்கள் சேதமடைந்த திசுக்களை சருமத்திலிருந்து நீக்குகின்றன. அதோடு முகத்தில் தோன்றுகின்ற  கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.
 
கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறப்பின் போது ஏற்படும் எத்தகைய உடல் நல குறைபாடுகளையும் போக்கும் திறன் இந்த கொத்தவரங்காய் கொண்டுள்ளது.
 
இரத்தச் சோகை இருப்பவர்கள் கொத்தவரங்காயை அதிகம் சாப்பிடுவதால் ரத்த சோகை நீங்கி உடலை மீண்டும் ஆரோக்கியமான நிலைமைக்கு கொண்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்