உடலுக்கு தேவையான அத்தியாவசியமான சத்துக்களை வழங்குவதில் பால் முக்கியமானதாக உள்ளது. ஆனால் தேவைப்படும் அளவை விட பால் அதிகம் எடுத்துக் கொள்வது சில ஆரோக்கிய பிரச்சினைகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதுகுறித்து காண்போம்.
பாலில் கால்சியம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதம், கலோரிகள் உள்ளது.
பால் அதிகம் சாப்பிடுவதால் உடலில் கால்சியம் சத்து அதிகரித்து எலும்பு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
பால் விரைவில் சீரணமாகாத உணவு என்பதால் அதிகம் எடுத்துக் கொள்வது செரிமான பிரச்சினையை ஏற்படுத்தலாம்.
பாலை பெரும்பாலும் பலர் டீ, காபியாகவோ சர்க்கரை அதிகம் கலந்தோ சாப்பிடுவதால் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
பாலில் அதிகமாக சர்க்கரை கலந்து சாப்பிடுவதால் பாலில் உள்ள சத்துக்கள் உடலில் சேருவது குறைகிறது.
பால் அதிகம் குடிப்பதால் கொழுப்புகள் உடலில் அதிகம் சேர்ந்து இதய பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
ஒரு நாளைக்கு மூன்று முறைக்குள் பால் குடிப்பது உடலுக்கு நலன் பயக்கும்.