மகத்தான மருத்துவ குணங்களை கொண்ட இலவங்கப்பட்டை !!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (17:20 IST)
இலவங்கபட்டையில் ஆல்டிஹைடு, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இது கால்சியம், இரும்பு மற்றும் மாங்கனீஸின் சிறந்த மூலமாகவும் விளங்குகிறது.


இலவங்கப்பட்டை ஒரு சக்தி வாய்ந்த மருந்துப் பொருளாகும். இது மெட்டா பாலிசத்தை அதிகரிக்க பயன்படுகிறது. ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டையில் 1. 4 கிராம் நார்ச்சத்துகளும், போதுமான அளவு கால்சியமும் உள்ளது. இதில் விட்டமின் ஏ, பி மற்றும் கே, ஆன்டி ஆக்ஸிடன்கள் என ஏராளமான சத்துக்கள் உள்ளன.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது நீரழிவு நோயை உருவாக்கிறது. எனவே இலவங்கப்பட்டையில் உள்ள ஆக்ஸினேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. அளவுக்கு மிஞ்சினால் அமுதம் நஞ்சு என்பது போல, உடலில் ஆக்ஸினேற்றம் அதிகரிக்கும் போது ரத்தத்தில் ஆக்ஸினேற்ற அழுத்தம் உருவாகிறது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து நீரழிவு நோய் ஏற்பட காரணமாக அமைய வாய்ப்புள்ளது. இலவங்கப்பட்டை இன்சுலின் எதிர்ப்பைக் குறைப்பதன் மூலம் இரத்த சர்க்கரையை குறைக்க உதவுவதாக தெரிவித்துள்ளனர்.

டைப் 2 நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது. இலவங்கப்பட்டை கோலின், பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்களால் நிறைந்துள்ளது. இலவங்கப்பட்டை மிக சக்தி வாய்ந்த பொருளாகும்.

இலவங்கப்பட்டையில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும், ஆரோக்கியமான உணவு, முறையான உடற்பயிற்சி மற்றும் சரியான நேரத்தில் மருந்துகள் ஆகியவையே ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை கட்டுக்கொள்ள உதவும் சிறப்பான வழிமுறைகள் என மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும், சிலரின் உடலை பொறுத்து அவை வேறுபடும் என்பதனையும் மனதில் கொள்ளவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்