தக்காளி - 1 கிலோ
சின்ன வெங்காயம் - 1/2 கிலோ
பூண்டு - 100 கிராம்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 கப்
வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
முதலில் வெங்காயத் துண்டுகளை, புளி, தண்ணீரில் ஊற வைத்திருக்கும் வர மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து, 2 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி இந்த பொருட்கள் அனைத்தையும் நைஸாக விழுது போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் வெங்காயம் மிளகாய் சட்னியை கடாயில் சேர்த்து மிதமான தீயில் நன்றாக கை விடாமல் வதக்கி கொண்டே இருக்க வேண்டும். இந்த வெங்காயம், மிளகாயின் பச்சை வாடை போகும் வரை வதக்க தண்ணீர் அனைத்தும் வற்றி, சுண்டி சுருண்டு வரும்.
பிறகு நன்றாக ஆறியதும், தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கொள்ளுங்கள். ஈரமில்லாத ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் இந்தச் சட்னி இரண்டு நாட்கள் ஆனாலும் ஃப்ரிட்ஜில் வைக்காமல் கூட நன்றாக இருக்கும். வெங்காயம், புளி, வர மிளகாய் காரம் சேரும் போது இதன் சுவை நன்றாக இருக்கும்.