உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் சாப்பிட ஏற்ற கொண்டைக்கடலை !!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (18:06 IST)
கொண்டைக் கடலையில் கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே தினமும் கொண்டைக்கடலையை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவு குறையும்.


கொண்டைக் கடலையில் நார்சத்து நிறைந்துள்ளதால் தினமும் இரவில் படுக்கும் போது கொண்டைக்கடலையை ஊற வைத்து, மறுநாள் காலையில் சாப்பிட்டு வந்தால், செரிமான பிரச்சனைகள் நீங்கும்.

கொண்டைக் கடலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆந்தோசையனின்கள், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் போன்றவை உள்ளன.

கொண்டைக் கடலையை இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் பச்சையாக சாப்பிடுவதோடு, அந்த நீரை குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

கொண்டைக் கடலையில் ஃபோலேட் மற்றும் மக்னீசியம் வளமான அளவில் உள்ளதால், இரத்த நாளங்களில் கொழுப்புகள் படிந்து அடைப்பு ஏற்படுவதை தடுத்து, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.

கொண்டைக்கடலையில் நார்ச்சத்து மற்றும் புரதசத்து வளமான அளவில் உள்ளதால் இரத்த சர்க்கரையின் அளவை பராமரிக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்