தினமும் ஒரு கைப்பிடி கொண்டைக்கடலை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் !!

செவ்வாய், 4 ஜனவரி 2022 (16:27 IST)
கொண்டைக்கடலையில் பலவித ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. கொண்டைக் கடலையில் அதிக அளவு புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

முடியின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு புரதம் மிக முக்கியம்.கொண்டைக்கடலையை புரதம், இரும்பு, ஜின்க் மற்றும் பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் முடி கொட்டுதலை தடுக்கும்.உங்களின் முடி வேரிலிருந்து வலுவாக வளர மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.
 
கொண்டைக்கடலையில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளது. உணவுகளில் உள்ள கால்சியம் சத்தினை உரிய மெக்னீசியம் சாது மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது. மேலும் எலும்பு மற்றும் பற்களின் வலிமையினை அதிகரிக்கின்றது. 
 
கொண்டைக்கடலையில் நார்ச்சத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இவற்றை நீங்கள் தினமும் உட்கொண்டு வந்தால் உங்களின் ஜீரண உறுப்புகள் மற்றும் குடலின் ஆரோக்கியம் மேம்படும். தினமும் ஒரு கைப்பிடி கொண்டைக்கடலையினை உட்கொண்டு வந்தால் உங்களுக்கு ஆரோக்கியமான ஜீரண மண்டலம் இருக்கும்.
 
கொண்டைக்கடலையில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. உங்கள் இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க பொட்டாசியம் சாது மிக மிக முக்கியம். உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் தினமும் கொண்டைக்கடலையை ஒரு கைப்பிடி உண்டு வந்தால் அவர்களின் இரத்த அழுத்தம் குறைந்து மேம்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்