கருப்பை நீர்கட்டி ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (12:20 IST)
மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் விடாய் தாமதம் ஏற்படும்.


மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன. சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம்.

இந்நோய்க்கான காரணத்தை அறுதியிட்டு கூற முடியாது பருவமடைந்த பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும் இது ஏற்படலாம். இதன் அறிகுறிகள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், அட்ரீனல் காட்டிகல் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பது, டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரப்பது, புரோலாக்டின் அதிகரிப்பது தான் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.

விட்டமின்கள் : பெண்களின் கருமுட்டை உற்பத்திக்கு தேவைப்படும் சக்திகளில் முதன்மையானது விட்டமின் டி. கருப்பை கோளாறுகள் வருவதற்கான காரணங்களில் 65 முதல் 85 சதவீதத்தினர் விட்டமின் டி குறைப்பட்டினால் தான் ஏற்படுகிறது. இதனால் விட்டமின் டி அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு கிளாஸ் சூடான நீருடன் இரண்டு டீஸ்ப்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் இரண்டு டீஸ்பூன் சேர்த்து குடிக்க வேண்டும். இதனை ஒரு நாளில் இரண்டு முதல் மூன்று முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இப்படிக் குடிப்பதனால் உடலில் இன்ஸுலின் அளவு சீராக இருக்கும்.

சுத்தமான தேங்காய் எண்ணெய் மூலமாக கூட கருப்பை நீர்க்கட்டிகளை நம்மால் வராமல் தடுக்க முடியும். தினமும் ஒரு ஸ்பூன் அளவாவது தேங்காய் எண்ணெய்யை உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் ஃபேட்டி ஆசிட், ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. சீரான அளவில் இதனை எடுத்துக் கொண்டால் இன்ஸுலின் சுரப்பை சீராக வைத்திருக்கும். அதே போல கெட்டக் கொழுப்பு ரத்தத்தில் கலப்பதையும் தடுத்திடும்.

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும். சீரகத்தில் இருக்கும் டாக்ஸின்கள் ரத்ததை சுத்தப்படுத்துகிறது, அதோடு உடலில் தேவையற்ற கொழுப்புகளை நீக்க உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்