கொத்தமல்லி இலைகளில் பல்வேறு வைட்டமின்கள், கனிமச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் விதை, காரம், கசப்பு, துவப்பு, இனிப்பு என 4 விதமான சுவைகளை கொண்டது.
உடலின் செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணம் ஆகச் செய்யும் தன்மை கொத்தமல்லிக்கு உண்டு. புளித்த ஏப்பம்,நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது.
கொத்தமல்லி இலையில் உள்ள கால்சியம் , இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது. இதன்மூலம், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.
கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள், பற்கள் உறுதி அடையும்.
கொத்தமல்லி இலையில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகை வருவதற்கான வாய்ப்புக் குறைகிறது. உடலின் ஆற்றலை அதிகரிக்க, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு, உறுப்புக்களின் இயல்பான இயக்கத்துக்கு என்று பெரிதும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
வாய்ப்புண்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும்.
கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து கொத்தமல்லியைச் சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். தினமும் நாம் உண்ணும் உணவில் ஏதோ ஒரு விதத்தில் கொத்தமல்லியை சேர்த்து வந்தால் நோயற்ற ஆரோகியமான வாழ்வை வாழலாம்.