வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய தாதுக்களை கொண்ட சாமை அரிசி !!

புதன், 30 மார்ச் 2022 (09:59 IST)
சாமை அரிசியில் வைட்டமின்கள், அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் முக்கியமான தாதுக்கள் போன்ற கூறுகளைக் கொண்டிருப்பதால் இது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது.


சாமை அரிசியில் எல்டிஎல் மற்றும் மொத்த கொழுப்பின் அளவைக் குறைப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இதய நோய் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.

சாமை அரிசியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்தை துரிதப் படுத்துகிறது. உடல் களைப்பு மற்றும் அசதியை போக்குகிறது. ஏனெனில் இது உடலை தங்கியுள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது.

சாமை அரிசியில் உண்ணக்கூடிய வடிவங்களில் டோகோபெரோல்ஸ், டோகோட்ரியெனோல்ஸ் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. உடல் ஆரோக்கியத்தில் கரோட்டினாய்டுகள் மற்றும் ஊட்ட சத்துக்கள் அவசியமாகும்.

சாமை அரிசி இரத்த சிவப் பணுக்களில் ஆக்ஸிஜனால் ஏற்படக்கூடிய சேதத்திலிருந்து பாதுகாக்கிறது மற்றும் புற்றுநோய், இருதய நோய்களிருந்து பாதுகாக்கிறது. அவை பெருந்தமனி தடிப்பை தடுக்கவும், தோல் அழற்சியைத் தடுக்கவும் நோய் எதிர்ப்புச் செயல்பாட்டை வலுப்படுத்தவும் உதவுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்