வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (11:48 IST)
வயிற்றுக் கோளாறு உள்ளவர்களுக்கு நிச்சயம் வாய் துர்நாற்றம் ஏற்படும். அல்சர் நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள்.


புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.

உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருக்கும் அமிலமானது மேல்நோக்கி வந்து போகும். இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

அஜீரணம் சம்பந்தமான கோளாறுகளால் அவதிபடுபவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படும். சாதரணமாக உணவுக்குழாயில் செல்லும் உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிட வேண்டும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவானது உணவு மண்டலத்திலேயே தங்கினால் வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும்.

தீர்வுகள்:

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் கிராம்பை மென்று வாயில் அடக்கிக் கொள்ளலாம். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படாது.

அரை லிட்டர் நீரில் புதினா சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்