தீராத சளி மற்றும் காய்ச்சலை குணமாக்கும் கருந்துளசி !!

புதன், 9 பிப்ரவரி 2022 (17:13 IST)
துளசி இலையை இலேசாக அவித்து 5 மி.லி. அளவுக்குச் சாறு எடுத்து காலை, மாலை வேளைகளில் ஒரு வாரம் வரை குடித்தால் தீராத சளித் தொல்லைகள் தீரும்.


ஐந்து கிராம் துளசி இலையை, இரண்டு மிளகுடன் சேர்த்து நன்றாக அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து காலை மற்றும் மாலை வேலைகளில் வெந்நீரில் சேர்த்து குடித்தால் தீராத காய்ச்சல் குணமாகும்.

கருந்துளசி காரம் சிறிது இருக்கும் ஆனால் சிறிது மிளகுடன் 10 துளசியிலைகளை பறித்து மென்று விழுங்கினால் தொண்டையில் உள்ள சளி முற்றிலுமாக நீங்கிவிடும்.

காலையில் எழுந்தவுடன் பல்லைக் கொப்பளித்துவிட்டு 5 இலைகளை உட்கொண்டால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று உபாதைகள் நீங்கிவிடும்.

வாய் துர்நாற்றத்தைப் போக்க கருந்துளசி இலைகளை பறித்து வாயில் மென்றால் பற்களில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும் வாயும் துளசி மணம் கமழும்.

ஒரு செடி வைத்து வளர்த்தால் அதன் விதைப்பட்டு பல செடிகள் அதன் அருகே வந்துவிடும். வறட்சியை தாங்கக்கூடியது. அதில் வேதிப்பொருட்கள் நிறைய இருக்கின்றது.

ஒரு கைப்பிடி துளசி இலைக் கொழுந்துடன் சிறிதளவு இஞ்சி சேர்த்து அரைத்து, சுண்டைக்காய் அளவான மாத்திரைகளைச் செய்து காய வைத்துக் கொள்ள வேண்டும். வேளைக்கு ஒரு மாத்திரை நசுக்கி, தேனில் கலந்து, குழைத்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வறட்டு இருமல் உடனடியாக குறையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்