பனங்கற்கண்டின் அற்புத மருத்துவ நன்மைகள் !!

வியாழன், 10 பிப்ரவரி 2022 (11:00 IST)
பனங்கற்கண்டில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிடலாம்.


பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால், மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி ஆகியவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும்.

பனங்கற்கண்டு வாத பித்தத்தை நீக்கி பசியை தூண்டுகிறது. முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும். இதில் இல்லாத மருத்துவ குணங்களே இல்லை.

கருவுற்ற பெண்கள் பனங்கற்கண்டு சாப்பிடுவதால் மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது. இருதய நோய் குணமாகும்.

பனங்கற்கண்டை வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் இதனால் சளி, இருமல் மற்றும் தொண்டைக் கரகரப்பு, போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகள் கிடைக்கும்.

சிறிதளவு சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கி விடும். 1/2 டேபிள் ஸ்பூன் பசு நெய்யுடன், சிறிதளவு பனங்கற்கண்டு மற்றும் நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால், உடல் சோர்வுகள் நீங்கி, சுறுசுறுப்புத் தன்மை அதிகரிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்