கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் கேரட் !!

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (13:44 IST)
கேரட்டில் வைட்டமின் ‘A’ உயிர்ச்சத்தை உண்டு பண்ணக்கூடிய காரடீன் என்ற ஒரு வகையான மஞ்சள் பொருள் நிறைய இருக்கிறது. இது தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி பெற்றதாக இருக்கிறது. கேரட்டைச் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இரத்த விருத்தி உண்டாகும்.


வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் உண்டாகும் மாலைக்கண் நோயை குணமாகும் கேரட். கண் பார்வை பிரச்சனை உள்ளவர்கள் கேரட்டை அடிக்கடி சாப்பிட வேண்டும். இதனால் கண் பார்வை அதிகரிக்கும்.

கண் சம்பத்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்து கண்ணுக்கு நல்ல கூர்மையான பார்வை அளிக்கிறது. மரபணு பாதிப்புகள், புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை தவிர்த்து ஆன்டி-ஆக்சிடண்டாக செயல்படுகிறது.

இதய நரம்புகளில் படியும் கொழுப்புகளை தவிர்த்து, இதயத்துக்கு பலத்தை கொடுக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைத்து, நல்ல ரத்த ஓட்டத்தை தருகிறது. தினமும் கேரட்டை சாப்பிட்டு வந்தால் இன்சுலின் அதிகமாக சுரக்கும். சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுகிறவர்கள் தினமும் கேரட் சாப்பிட வேண்டும்.

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி உடலை ஆரோக்கியமாகவும் வைக்கிறது. உடல் எடையை குறைத்து மெலிவான தோற்றத்தை தருகிறது. கேரட்டுடன் தேன் சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், கேரட்டை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். கேரட்டை எலுமிச்சை சாற்றுடன் பாலில் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்