பீட்ரூட் நமது உடலின் ஆக்ஸிஜன் உறிஞ்சும் சக்தியை அதிகரிக்கிறது. இதே சிவப்பு நிறத்தில் ஃபோலாசின், பீட்டா கரோட்டின் இருப்பதால், பெண்களின் உடல்நலத்துக்கு மிகச் சிறந்தது.
பீட்ரூட்டை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தம் குறைகிறது, உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது, இதய நோய் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறது. டிமென்ஷியா எனும் மூளை சம்பந்தமான பிரச்சனைக்கு தீர்வு காண்கிறது, மேலும் உடல் எடைப் பிரச்சினை உடையவர்களுக்கு உடல் எடையை சரியான அளவு பராமரிக்க உதவுகிறது.
பொட்டாசியம் நிறைந்துள்ள இந்த பீட்ரூட் நரம்பு மற்றும் தசைகளின் செயலாக்கத்திற்கு மிகவும் உதவுகிறது. பொதுவாக பொட்டாஷியம் அளவு குறையும்போது சோர்வு, பலவீனம், மற்றும் தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். குறைவான பொட்டாசியம் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு காரணமாக அமையும். இந்த பீட்ரூட்டில் பொட்டாசியம் என்பது அதிக அளவு உள்ளது. அதனால் இதனை வாரம் இரு முறையாவது எடுத்துக்கொள்வது நல்லது.
பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர, சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். பீட்ரூட் சாறுடன் படிகாரத்தைப் பொடியாக்கி சேர்த்துக் கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ, எரிச்சல், அரிப்பு மாறும்.
பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வந்தால் அவை அனைத்தும் குணமாகும். பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமான சக்தியைக் கூட்டும்.