ரத்தசோகையை போக்கி உடல் ஆரோக்கியத்தை காக்கும் பழங்கள் !!

புதன், 24 ஆகஸ்ட் 2022 (10:54 IST)
கருப்பு திராட்சையில் வைட்டமின் ‘ஏ’, ‘பி’, ‘சி’ மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. நார்ப்பொருள் 2.8 கிராம் உள்ளது. இப்பழத்தில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும்.


சப்போட்டாவில் மாவுச்சத்து, 21.4 கிராம், இரும்புச்சத்து 2 மில்லிகிராம் உள்ளது. வைட்டமின் ‘ஏ’, ‘பி’ மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட்கள் சிறிதளவு உள்ளன. இதில் சர்க்கரை மிக எளிய வடிவத்தில் இருப்பதால், சாப்பிட்ட உடனேயே உடலுக்கு ஆற்றலைத் தரும். இப்பழத்தை சாப்பிடுவதால் ரத்தசோகையைப் போக்கலாம்.

அன்னாசிப்பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’, ‘பி’, ‘சி’ உள்ளன. நார்ச்சத்து 0.5 கிராம், கால்சியம் 20 மில்லிகிராம், மாவுப்பொருள் 10.8 கிராம் உள்ளது. இப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.

வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. தவிர வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ உள்ளன. இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட்களும் இதில் உள்ளன. வாழைப்பழங்களில் பூவன் பழம் மலச்சிக்கலைப் போக்கவல்லது, நேந்திரன் பழம் ரத்தசோகையைப் போக்கும், மலைவாழைப்பழம் ரத்த விருத்தி செய்யும்.

சீத்தாப்பழத்தில் பொட்டாசியம் 340 மில்லிகிராம், நார்ப்பொருள் 3.1 கிராம் உள்ளது. இது தவிர கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் வைட்டமின்கள் ‘பி’, ‘சி’-யும் உள்ளன. நார்ச்சத்து குறைவினால் மலச்சிக்கல் ஏற்படும், பொட்டாசியம் குறைவினால் உடல்சோர்வு ஏற்படும்.

மாதுளம்பழத்தில் பாஸ்பரஸ் 70 மில்லிகிராம் உள்ளது. கால்சியம், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும், வைட்டமின்கள் ‘பி’, ‘சி’ சிறிதளவும் உள்ளது. கால்சியம் உடலில் சேர்வதற்கு பாஸ்பரஸ் உதவுகிறது. ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த மருந்தாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்